சங்க இலக்கியப் பொன்மொழிகள்
1. அருமைநற் குஅறியினும், ஆர்வம் நின்வயின் பெருமையின் வல்லா யாம்இவண் மொழிபவை மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லியம் திருமறு மார்பநீ அருளல் வேண்டும். 2. நின்அளந் துஅறிதல் மன்னுயிர்க் குஅருமையின், நின்அடி உள்ளி வந்தனென்; நின்னொடு புரையுநர் இல்லாப் புலமை யோய்... 3. தீயினுள் தெறல்நீ; பூவினுள் நாற்றம்நீ; கல்லினுள் மணியும்நீ; சொல்லினுள் வாய்மைநீ; அறத்தினுள் அன்புநீ; மறத்தினுள் மைந்துநீ. 4. யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும்அல்ல; நின்பால் அருளும், அன்பும், அறனும், மூன்றும் உருள்இணர்க் கடம்பின் ஒலிதா ரேயே!